தமிழ்ச் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் நடிகைகளில் ஒருவராகி உள்ளார் வாமிகா கபி.
பல இந்திப் படங்களில் நடித்து வரும் இவரால் தூக்கம் கெட்டுப்போனதாக இளையர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
செல்வராகவன் இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் வாமிகா கபி.
தற்போது ரவி மோகன் இயக்கும் ‘ஜீனி’ படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் ‘டிசி’ படத்தில் வாமிகாதான் நாயகி.
நாயகன், நாயகி இவர்களது பெயர்களின் முதல் எழுத்துகள்தான் ‘டிசி’ என்று தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.
“தமிழில் அறிமுகப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறப்பாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. தரமான படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்த மனநிறைவு உள்ளது.
“இனிமேலும் கதைத் தேர்வில் கவனம் செலுத்துவேன். தமிழ் ரசிகர்களின் மனத்தில் எனக்கும் நிச்சயமாக ஓர் இடம் கிடைக்கும்,” என்கிறார் வாமிகா.

