‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் சுரேஷ் சங்கையா அண்மையில் காலமானது தெரியும்.
கல்லீரல் பாதிப்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அது பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். அதற்கு முன்பாக, அவர் இயக்கிய இரண்டு படங்கள் வெளியீடு காணத் தயார் நிலையில் உள்ளனவாம். அவற்றில் யோகி பாபுவும் செந்திலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விருவரும் இணைந்து சுரேஷ் சங்கையா குடும்பத்துக்கு உதவும் வகையில் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக கணிசமான தொகையை வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி, அதிலிருந்து மாதந்தோறும் ஒரு தொகை கிடைக்கும்படி ஏற்பாடு செய்துள்ளனராம்.
இருவருக்கும் சங்கையாவின் திரை நண்பர்களும் உறவினர்களும் நன்றி தெரிவித்துள்ளனராம்.