‘கருடன்’, ‘விடுதலை 2’ படங்களுக்குப் பிறகு சூரி நடித்து வரும் படம் ‘மாமன்’. திருச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கவும் படக்குழு திட்டமிட்டு உள்ளது.
தாய்மாமனுக்கும் மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை கதைக்களம் விவரிக்கும் என்பதால் இப்படத்துக்கு ‘மாமன்’ எனப் பெயர் வைத்துள்ளனர்.
இப்படத்தின் முதல் சுற்று சுவரொட்டிகளைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
‘கொட்டுக்காளி’, ‘விடுதலை’, ‘கருடன்’ படங்களில் தொடர்ந்து நாயகனாக, பரபரப்பான பாத்திரங்களில் நடித்து வந்த சூரி, ‘மாமன்’ படத்தின் மூலம் மீண்டும் கலகலப்பான வேடத்துக்கு திரும்பியிருப்பது முதற் தோற்ற சுவரொட்டிகளில் தெளிவாகிறது.
இப்படத்தில் சூரிக்கு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமியும் சூரியின் அக்காவாக ஸ்வாசிகாவும் நடிக்கின்றனர்.
‘கருடன்’ படத்தைத் தயாரித்த லார்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்து வருகிறது.
‘மாமன்’ படத்தை முடித்துவிட்டு, ‘செல்ஃபி’ இயக்குநர் மதிமாறன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சூரி.

