‘விலங்கு’ இணையத்தொடர் மூலம் பிரபலமான பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ளது ‘மாமன்’ திரைப்படம்.
ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார்.
எதிர்வரும் மே 16ஆம் தேதி இப்படம் திரை காண உள்ள நிலையில்,
அடுத்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிக்கிறார் சூரி.
எல்ரட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
படத்துக்கு ‘மண்டாடி’ என்று பெயர் வைத்துள்ளனர். கடல் குறித்த ஆழ்ந்த அறிவு உள்ளவரை, நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவரை ‘மண்டாடி’ எனக் குறிப்பிடுவார்களாம்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில், ஏற்கெனவே ‘செல்ஃபி’ படம் வெளியாகி உள்ளது.
‘மண்டாடி’ படத்தில் முத்துக்காளி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூரி.

