நடிகர் சூர்யா தனது புதிய படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான ‘கங்குவா’ படம் படுதோல்வி அடைந்தாலும், அதற்கு அடுத்து வெளியான ‘ரெட்ரோ’ அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.
அப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெறாவிட்டாலும் ‘கங்குவா’ படத்திலிருந்து மீள சூர்யாவுக்கு உதவியது.
அதைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது ‘கருப்பு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மலையாளப் படமான ‘ஆவேசம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் அதில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில், அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.