‘ரெட்ரோ’ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45வது திரைப்படமாகும்.
அண்மையில், இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சி வெளியானது. அதில் சண்டைக் காட்சிகள் அதிகம் காணப்பட்டது. மேலும் குறு முன்னோட்டக் காட்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 24) படத்தின் குறு முன்னோட்டக் காட்சியைப் படக்குழு ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தது.
அப்போது ஆர் ஜே பாலாஜி ரசிகர்களிடம் படத்தைத் தீபாவளிக்கு வெளியிட முயற்சி செய்கிறோம் எனக் கூறினார்.
இப்படத்தை ‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் மூலம் சாய் அபயங்கர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.

