சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம், சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜி இதுகுறித்துப் பேசுகையில், “படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. ஓடிடி உள்ளிட்ட வியாபார ஒப்பந்தங்கள் காரணமாகவே அறிவிப்பு தாமதமானது.
“படம் நன்றாக வந்துள்ளது; அதை மிகைப்படுத்திப் பேச நான் விரும்பவில்லை. தேர்தல் முடிந்த பிறகு திரைகாணும் ‘கருப்பு’, கோடை விடுமுறையில் அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

