திருமணத்திற்குப் பிறகு நடிக்கமாட்டார் எனக் கருதப்பட்ட பல நடிகைகள் தொடர்ந்து நடித்து வருவதைப் பார்த்திருக்கிறோம். அந்தப் பட்டியலில் கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார்.
அவர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இருவரும் நடித்திருந்தனர்.
தற்போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதில் திரிஷா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
சூர்யாவின் 46வது படத்தை ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பது உறுதியாகிவிட்டதாம்.
இப்படத்தில்தான் சூர்யாவும் கீர்த்தி சுரேஷும் இணைவதாகத் தகவல்.


