தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரோலக்ஸ் படத்தின் மூலம் மீண்டும் இணையும் சூர்யா, லோகேஷ்

1 mins read
1e3fb347-6d30-4302-af07-979554bb40ef
இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் சூர்யா. - படம்: ஊடகம்

சூர்யாவும் லோகேஷும் கன்னட சினிமாவைச் சேர்ந்த ‘கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ‘ரோலக்ஸ்’ படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

‘கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் முதன்முறையாக தமிழில் விஜய்யை வைத்து ‘ஜனநாயகன்’ என்ற படத்தை தயாரிக்கிறது. இதன் மூலம் தமிழில் இன்னும் பல படங்களை தயாரிக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ‘ரோலக்ஸ்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். அது மிகவும் பிரபலமானது.

அதன்பிறகு ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தை தனியாக வைத்து திரைப்படமாக உருவாக்க உள்ளதாக தெரிவித்தனர்.

தற்போது லோகேஷ் கனகராஜ், சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘ரோலக்ஸ்’ படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்