பார்வையற்ற காவல்துறை அதிகாரியாக சூர்யா

பார்வையற்ற காவல்துறை அதிகாரியாக சூர்யா

படம்: விக்கிபீடியா

21 Aug 2026 - 5:02 pm

1 mins read

தமிழ்ச் சினிமா உலகில் முன்னணிக் கதாநாயகனாக வலம்வரும் நடிகர் சூர்யா, அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான அவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிநடை போட்டு வருகின்றன.

இந்நிலையில், மலையாளத்தில் வெளியான ‘ஆவேசம்’ திரைப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில், தனது 47வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் சூர்யா மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகத் தகவல். அவருடன் நடிகை நஸ்ரியா, நஸ்லன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் சூர்யா ஒரு பார்வையற்ற காவல் அதிகாரியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு வழக்கைத் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக சூர்யா தனது பார்வையை இழக்க நேரிடுகிறது. அதன்பின் சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் வெளிவரும் அதே வழக்கை தனது கூர்மையான புத்திக்கூர்மையாலும் திறமையாலும் அவர் எவ்வாறு விசாரித்து முடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதைச் சுருக்கம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி சூர்யாவின் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சூர்யாதிரைப்படம்காவல்துறைபார்வையற்றோர்அதிகாரி