தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்கும் சூர்யா

1 mins read
0895b3cd-af44-47fa-b5f4-41fc6d08e5e2
ஆர்.ஜே.பாலாஜி, சூர்யா. - படம்: ஊடகம்

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரைகாண உள்ளது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இது அவரது 44வது படமாகும்.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்.ஜே.பாலாஜிக்கு சூர்யா கால்ஷீட் கொடுத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சூர்யா நடிக்கும் படத்துக்கான படப்பிடிப்புத் தளங்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்