தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் இணையும் ‘ரெட்ரோ’

1 mins read
fde8680e-8c2d-4f78-816d-ed0f5b1e7e6e
சூர்யா. - படம்: ஊடகம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முன்னோட்டக் காட்சி ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இப்படத்தின் கதை குறித்து கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியொன்றில் “கங்குவா’ சர்ச்சைக்குப் பிறகு வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இப்படத்தினை மார்ச் மாதத்தில் வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதன் படப்பிடிப்பை முடித்து, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்ட பலர் இதில் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாசூர்யா