‘கங்குவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திரைத்துறையில் உள்ள பலரும் படத்தில் நடித்த நடிகர்களும் இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் நடிகர் சூர்யா, “என்ன வெறுப்பை விதைத்தாலும் நாம் அன்பை மட்டுமே பரிமாறுவோம். வீட்டில் உள்ள அத்தனை பெண்களுக்கும் நன்றி.
ரசிகர்களாகிய உங்களின் அன்பு எனக்கு விலைமதிப்பில்லாதது. வில்லில் அம்பு பின்னால் சென்றால்தான் நினைத்த இலக்கை அடைய முடியும். அன்பாக இருப்போம், நல்லதையே செய்வோம்.
எனக்கு லயோலா கல்லூரியில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். அவரை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். மற்றொருவர் புதிய பாதையை நோக்கிச் செல்கிறார். உன் ரத்தமும் என் ரத்தமும் வேறு வேறல்ல. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று விஜய்யின் பெயரைச் சொல்லாமல் வாழ்த்து சொன்னார் சூர்யா.