தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூர்யா முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி

1 mins read
b3ce87d9-12f5-432f-b27f-64940238fb3e
2025ஆம் ஆண்டு ‘சூர்யா 44’ மற்றும் ‘சூர்யா 45’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.  - படம்: சமூக ஊடகம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. அண்மையில் அவர் நடித்த படங்கள் அவ்வளவாக மக்களை ஈர்க்கவில்லை.

“ஓடிடி” தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்’, ‘சூரரைப் போற்று’ ஆகிய படங்கள் கொரோனா காலத்தில் மாபெரும் வெற்றியை சூர்யாவுக்கு தந்தன. ஆனால் திரையரங்குகளில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை.

இப்போது சூர்யா நடிப்பில் ‘சூர்யா 44’ மற்றும் ‘சூர்யா 45’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.

‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார் சூர்யா.

இந்த நிகழ்வு தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 300 ரசிகர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

ரசிகர்களிடம் பேசிய சூர்யா, “இனி ஆண்டுக்கு இரண்டு படங்கள் வெளியாகும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் இந்தப் பேச்சு ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

2025ஆம் ஆண்டு ‘சூர்யா 44’ மற்றும் ‘சூர்யா 45’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. விரைவில் ‘சூர்யா 44’ படத்தின் தலைப்புடன் கூடிய முன்னோட்டக் காணொளி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

அண்மையில் சூர்யா நடித்து வெளியான ‘கங்குவா’ படம் பெரும் ஏமாற்றத்தை தந்தது. சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய போதிலும் திரைக்கதை மக்களை ஈர்க்காததால் அது வசூலில் சாதிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்
சூர்யாசினிமாதிரைச்செய்தி