மூன்று ரஜினி படத் தலைப்புகளுடன் உருவாகும் படம்

மூன்று ரஜினி படத் தலைப்புகளுடன் உருவாகும் படம்

1 mins read
d2d2a00a-1b9a-41fd-bc93-ab82b44c1270
சுதீப். - படம்: ஊடகம்

நடிகர் சுதீப் நடிக்கும் ஒரு புதுப் படத்துக்கு ‘பில்லா ரங்கா பாஷா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று வார்த்தைகளுமே ரஜினி நடித்துள்ள படங்களின் தலைப்புகள் ஆகும்.

இப்படம் 2209ஆம் ஆண்டு நடப்பது போன்ற கதையுடன் உருவாகிறது. அறிவியலும் கற்பனையும் கலந்து கதைக்களத்தை சுவாரசியமாக உருவாக்குவதாகச் சொல்கிறார் இயக்குநர் அனுப் பண்டாரி.

“ரஜினி நடித்த மூன்று படங்களின் தலைப்பை ஒருசேர வைத்திருப்பது ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. இது எனக்கும் தெரியும்.

“இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் முறைப்படி அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்,” என்கிறார் அனுப் பண்டாரி.

எனினும் மூன்று படங்களையும் தயாரித்த பட நிறுவனங்கள் தலைப்புகளை விட்டுத்தர வாய்ப்பில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

“ரஜினி படத்தலைப்புகளை மீண்டும் பயன்படுத்தும்போது இயல்பாகவே அது ரசிகர்களைக் கவர்கிறது. நடிகர் தனுஷ் ரஜினி படத்தலைப்புகளை பலமுறை பயன்படுத்தி உள்ளார்.

“தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’, ‘பொல்லாதவன்’ ஆகியவை ரஜினி நடித்த படங்களின் தலைப்புகள்தான்.

“ரஜினியும்கூட ஒரே படத்துக்காக, தாம் நடித்த மூன்று படங்களின் தலைப்புகளை விட்டுத்தர விரும்புவாரா என்பது சந்தேகம்தான்,” என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

குறிப்புச் சொற்கள்