மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ‘ஐபிஎல்’ கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ (‘சிஎஸ்கே’) அணிக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இக்குழு வெளியிட்ட காணொளியை ‘சிஎஸ்கே’ ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனது போட்டியில், சென்னை அணி, மும்பை இன்டியன்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதையடுத்து, இப்போட்டி தொடங்கும் முன்பு இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வாறு இசையும் காணொளியும் சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.