அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் விலகப்போவதாகத் தெரிவித்துள்ளார் அனுஷ்கா.
எல்லாரையும் மிக விரைவில் கூடுதல் கதைகளுடனும் அன்புடனும் சந்திக்க இருப்பதாக அவர் தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“சமூக ஊடகங்களிலிருந்து சில காலம் விலகியிருக்க முடிவு செய்துள்ளேன். உலகத்துடன் மீண்டும் இணைந்து, தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள, உண்மையில் நாம் அனைவரும் தொடங்கிய இடத்திற்கே செல்ல இது உதவும்,” என்று அனுஷ்கா மேலும் கூறியுள்ளார்.
அண்மையில் இவர் நடிப்பில் உருவான, ‘காட்டி’ திரைப்படம் படுதோல்வி கண்டது. இந்தப் படம்குறித்து பல விமர்சகர்கள், குறைந்தபட்ச விமர்சனம்கூட செய்யவில்லை.
இத்தனைக்கும் தமது சமூக ஊடகப் பக்கம்மூலம், தன் படத்துக்கு விளம்பரமும் தேடினார் அனுஷ்கா.