திருமண வாழ்க்கை குறித்து மனம்திறந்த தமன்னா

1 mins read
00f517ec-dc2b-462c-a084-ceb017c75182
தமன்னா. - படம்: ஊடகம்

நடிகை தமன்னா தமது முப்பதாவது வயதுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அந்த ஆசை கைகூடவில்லை என அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு இப்போது 35 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லையே என்று கேட்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நான் அதற்குத் தயாராகவே உள்ளேன்,” என்று பதில் அளித்துள்ளார் தமன்னா.

இதன்மூலம் அவர் தனது நெருக்கமான நண்பரும் இந்தி நடிகருமான விஜய் வர்மாவைப் பிரிந்திருப்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.

தென்னிந்திய மொழிகளில் அதிக வாய்ப்பு இல்லாவிட்டாலும், வடஇந்தியாவில் பல கோடி ரூபாய்களைச் சம்பளமாகப் பெறுகிறார் தமன்னா. வேறு சில தொழில்கள் மூலமாகவும் வருமானம் கிடைக்கிறது.

குறிப்புச் சொற்கள்