தமிழ்த் திரையுலகப் பிரபலங்களில் ஒருவரான நடிகை தமன்னா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்கள், காணொளிகளோடு தத்துவத்தையும் பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் “இது கண்டுபிடிக்கும் கட்டம். நீங்கள் பாதி வடிவமைப்பாளராகவும் பாதி துப்பறியும் நபராகவும் இருக்கும் கட்டம். ஒவ்வொரு விவரமும் முக்கியமானது, ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது. யோசனைகள் ஒட்டும் காகிதங்களில் வாழ்கின்றன. இது இன்னும் சரியாகவில்லை. ஆனால் அது அதன் வழியில் உள்ளது. நேர்மையாகச் சொன்னால் இதுதான் மந்திரம். ஒவ்வொரு பளபளப்பான பொருளுக்குப் பின்னால் ஒரு பளபளப்பற்ற செயல்முறை உள்ளது. முடிவுகளும் சந்தேகங்களும் இதுதான். அந்தப் பகுதி அறிவார்ந்த குழப்பமான, உற்சாகமான நடுப்பகுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.
அனுபவங்கள் பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன என்ற அடிப்படையில் தமன்னாவிற்கு ஏதோ ஒரு அனுபவம் அல்லது சில அனுபவங்கள் அப்படி ஒரு பதிவைப் பதிவேற்ற வைத்துள்ளது என்று கருதப்படுகிறது. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவைக் காதலித்து வந்த தமன்னா சில மாதங்களுக்கு முன்னர் அவருடனான உறவை முறித்துக்கொண்டார். அதன் விளைவாக இன்ஸ்டாகிராமில் அவர் அந்தப் பதிவைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
16 வயதில் திரையுலகிற்குள் கால் எடுத்துவைத்த தமன்னா, காலப்போக்கில் பிரபல நடிகையானார். முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் ஆகியோருடன் நடித்துள்ளார் தமன்னா.
ஜெயிலர் படத்தில் ‘காவாலா’ பாடலில் நடனமாடி மேலும் பலரது கவனத்தை அவர் ஈர்த்தார். தமிழ் திரையுலகில் அண்மைய காலமாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றபோதும் பல ரசிகர்களைக் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் தமன்னா.
தமிழில் அவர் இறுதியாக நடித்து சென்ற ஆண்டு வெளிவந்த ‘அரண்மனை 4’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்த வெற்றிப் படமாக உள்ளது. தற்போது தெலுங்கில் ஒரு படமும் இந்தியில் ஒரு படம், சில இணைய தொடர்களிலும் தமன்னா நடித்து வருகிறார்.
முன்பிருந்ததைப் போல தமன்னா எதிர்பார்க்கும் பெரிய அளவிலான திரைப்படங்கள் கிடைக்கவில்லை. ஓரிரு படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும் அவை மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுத்தரத் தவறின.
தமன்னாவின் திரைப் பயணம் இறுதிக் கட்டங்களில் உள்ளதா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
திரைப்படங்கள், இணையத் தொடர்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தமன்னா அதிகம் ஈடுபட்டிருந்தாலும் முன்பிருந்ததைப் போல தமன்னா இப்போது இல்லை என்று இணையவாசிகள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், விஜர் வர்மாவுடன் ஏற்பட்ட உறவு முறிவு குறித்து இருவரும் எந்தக் கருத்தும் இதுவரை வெளியிடவில்லை.

