‘பாகுபலி’ பட வெற்றியின் ரகசியத்தைப் பகிர்ந்த தமன்னா

‘பாகுபலி’ பட வெற்றியின் ரகசியத்தைப் பகிர்ந்த தமன்னா

படம்: சினி உலகம்

23 May 2026 - 6:44 pm

1 mins read

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த தமன்னா, தற்போது பாலிவுட் திரையுலகிலும் நடித்து வருகிறார்.

அவரது கலைப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ’பாகுபலி’.

இந்நிலையில், அப்படத்தின் உருவாக்கம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் பெரும்பாலானோரின் கவனத்தைப் பெற்று வருகின்றன.

“கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தபோது, ‘பாகுபலி’ படத்திற்காக எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் மிகச் சரியானதாகவும் அற்புதமானதாகவும் தோன்றுகிறது. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தொலைநோக்குப் பார்வையுடன், எந்தவொரு இடத்திலும் தரம் குறைந்த உடன்பாடுகளைச் செய்துகொள்ளாமல் படத்தை உருவாக்கினார்,” எனத் தமது பதிவில் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அந்த உறுதியும் நம்பிக்கையும்தான் ‘பாகுபலி’ படத்தை உலகளவில் பிரம்மாண்ட வெற்றியடைய வைத்ததாகவும் இல்லையெனில், வர்த்தக ரீதியாகப் பல கடுமையான சவால்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தமன்னாவெற்றிதிரைப்படம்