‘அரண்மனை-4’ படத்தின் வெற்றி தமன்னாவுக்கு தெம்பளித்துள்ளது.
மீண்டும் தமிழில் நல்ல வாய்ப்புகள் பல தேடி வருகின்றனவாம். எனினும் நல்ல கதாபாத்திரங்களுக்காகவும் வலுவான கதையும் ஒருசேர அமையக் காத்திருக்கிறார் தமன்னா.
இந்தியில் இவர் கௌரவ வேடத்தில் நடித்த இரண்டு படங்கள் அண்மையில் வெளியீடு கண்டன.
இந்த மகிழ்ச்சியில் அடுத்து தெலுங்கில் நாயகியாக நடித்துவரும் ‘ஓடெல்லா-2’ படத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்.
இது நாயகியை முன்னிலைப்படுத்தும் திகில் படமாக உருவாகிறது.