தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிரடியான சண்டைக் காட்சியில் மிரட்டி இருக்கும் தமன்னா

2 mins read
17e09aab-0a53-4f08-861d-e750c69ff413
பெண் சாமியார் வேடத்தில் நடித்திருக்கிறார் தமன்னா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா நாயகியாக நடித்துள்ள ‘ஒடேலா 2’ திரைப்படத்தில் ஒரு புனித கிராமத்தை காக்கும் அதிரடியான பெண் சாமியார் வேடத்தில் ஆவேசமாக நடித்திருக்கிறார் தமன்னா.

தமன்னா பெண் சாமியாராக நடித்திருக்கும் ‘ஒடேலா 2’ திரைப்படத்தின் மூன்று நிமிட முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியானது. அது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அசோக் தேஜா இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் ‘ஒடேலா ரயில் நிலையம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. ஒடேலா மல்லன்னா சுவாமியால் பாதுகாக்கப்பட்ட ஒரு கிராமத்தைப் பற்றிய கதை இது. இதில் தமன்னா, சிவசக்தியாக தீய சக்திகளை எதிர்த்துப் போராடுகிறார்.

தமிழில் வெளியான இந்த முன்னோட்டக் காட்சி, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான முடிவில்லாப் போரைக் கண்முன் நிறுத்தியது. தமன்னாவின் நடிப்பு, கிராமத்தைக் காக்கும் ஒரு தெய்வீக சக்தியாக வெளிப்படுகிறது.

முன்னோட்டக் காட்சியில், பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அதிரடி காட்சிகளும் சிந்தனையைத் தூண்டும் வசனங்களும் இருந்தன. இந்த முன்னோட்டக்காட்சி திரைப்படத்தின் மாயாஜால அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் இருந்தன. இது திகில், மர்மம் நிறைந்த திரைப்படங்களை விரும்புபவர்களுக்கான ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் என்று பாராட்டி ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

அத்துடன் தமன்னாவின் நடிப்பையும், திரைப்படத்தின் காட்சிகளையும் சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தீய சக்திகளை எதிர்த்துப் போராடும் வேடத்தில் தமன்னா நடித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கும்பமேளா நடந்த பிரக்யாராஜ் நகரில் நடந்து முடிந்தது.

‘ஒடேலா 2’ திரைப்படத்தில் தமன்னா, ஹெபா பட்டேல், வசிஷ்ட என் சிம்ஹா, முரளி சர்மா, சரத் லோகிதஸ்வா, யுவா, நாக மகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் 17ஆம் தேதி வெளியீடு காணவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை