தமிழ்த் திரையுலகில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள்; 500 பேர் சிக்குவர்: ரேகா நாயர்

1 mins read
3c127568-cd96-46eb-be1c-72b2e09f0659
நடிகை ரேகா நாயர். - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் மட்டும் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளன என்றும் ஹேமா குழுவின் அறிக்கைபோல் தமிழகத்திலும் வெளியானால் 500க்கும் மேற்பட்டோர் சிக்குவார்கள் என்றும் நடிகை ரேகா நாயர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹேமா ஆணைய அறிக்கை குறித்து தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நாயகன்கள் கருத்து தெரிவிக்காமல் மழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், துணிச்சலாகத் தமது கருத்துகளை வெளியிட்ட நடிகை ரேகா நாயர், “தமிழ் சினிமா மட்டுமல்ல, அனைத்து மொழி சினிமாவிலும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளன. மலையாளத்திலாவது 10, 20 பேர்தான் சிக்கியிருக்கிறார்கள். இதேபோல், தமிழ் சினிமாவிலும் நடிகைகள் புகார் கொடுக்கத் தொடங்கி, ஆணைய அறிக்கை வெளியானால் 500 பேருக்குமேல் சிக்குவார்கள்.

“தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகள் முதல் புதிதாக படப்பிடிப்புக்குவரும் பெண்கள்வரை பலரும் இக்கொடுமையை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுகுறித்து குரல் கொடுத்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்பதால்தான் பலரும் நமக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று ஒதுங்கி இருக்கிறார்கள்.

“தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளன. அது மட்டுமன்றி, புகார் கூறும் நடிகைகளுக்கு பிரபல நடிகர்களால் மிரட்டலும் வருகிறது,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்