தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாகார்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்

1 mins read
0c044f2d-3c2c-44fb-bae2-79834bb628eb
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தை ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்குநர் ரா.கார்த்தி இயக்க இருக்கிறார். தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகி இந்திய அளவில் பிரபல நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. தெலுங்கு திரை உலகில் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது தனுஷுடன் இணைந்து ‘குபேரா’ படத்திலும் ரஜினியின் ‘கூலி’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நாகார்ஜுனா, அடுத்ததாக தனது 100வது படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை தமிழ் சினிமா இயக்குநர் ரா.கார்த்தி இயக்க இருக்கிறார்.

இயக்குநர் ரா.கார்த்தி 2022ஆம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நாகார்ஜுனாவின் 100வது படத்தை ரா.கார்த்தி இயக்குவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்