தனக்கு கடந்த ஆண்டே திருமணம் நடந்துவிட்டதாகவும் அதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.
இவருக்கும் டென்மார்க்கைச் சேர்ந்த பூப்பந்து வீரர் (பேட்மிண்டன்) மதியாஸ்போ என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் காதல் மலர்ந்ததாகத் தகவல் வெளியானது. இருவரும் அதை மறுக்காத நிலையில், நடிகை டாப்சி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தங்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததாகத் தெரிவித்துள்ளார் டாப்சி.
“நான் இந்த அறிவிப்பை வெளியிடுவேன் என்பது எனக்கு நெருக்கமானவர்களுக்குக் கூட தெரியாது. எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாருக்கும் தகவல் தெரிவிப்பதை விரும்பவில்லை.
“கடந்த 2013ஆம் ஆண்டு முதல் என் கணவரைத் தெரியும். அவருக்கும் என்னைப் பற்றி எல்லாம் தெரியும்,” என்கிறார் டாப்சி.
இவரது கணவர் மதியாஸ்போ இந்திய பூப்பந்து அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார்.