‘விடுதலை 2’ படத்தின் ‘டப்பிங்’ பணி தொடங்கியது

‘விடுதலை 2’ படத்தின் ‘டப்பிங்’ பணி தொடங்கியது

1 mins read
4cf67b42-2748-4eaf-ac0f-49a3c742b870
‘விடுதலை-2’ படத்தின் பின்னணிக் குரல் பதிவின்போது வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை 2’ படத்தின் பின்னணிக் குரல் பதிவு (டப்பிங்) பணி தொடங்கி உள்ளது. இதில் விஜய் சேதுபதியும் சூரியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வசனப் பதிவின்போது இருவரும் போட்டி போட்டுக்கொண்டு உணர்வுபூர்வமாகப் பேசியதாகப் பாராட்டினாராம் வெற்றிமாறன்.

சூரியின் உழைப்பு அபரிமிதமானது என்றும் தமிழ்த் திரையுலகின் முக்கியமான நாயகர்களின் பட்டியலில் அவரும் இடம்பெறுவார் என்றும் பாராட்டினாராம் விஜய் சேதுபதி.

இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார் சூரி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்