தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம், திறப்பு விழா காண தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. எனினும் சங்கத்துக்குள் நிலவிய பிரச்சினைகளால் 60% பணிகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.
வங்கிக்கடன் கிடைக்காததால், நடிகர் நடிகைகள் பலர் நிதி வழங்கினர். இதன் மூலம் போதுமான தொகை திரட்டப்பட்டது.
இதையடுத்து மீண்டும் தொடங்கப்பட்ட கட்டடப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இந்தப் பணிகளை விஷால், கார்த்தி இருவரும் நேரில் பார்வையிட்டனர். மேலும், விநாயகர் கோவிலில் பூசை செய்து வழிபாடும் செய்தனர்.
திரையரங்கம், திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சிக் கூடம், நடிப்புப் பயிற்சிப் பள்ளி எனப் பல்வேறு வசதிகளுடன் நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் தயாராகி வருகிறது.


