தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிம்புவும் சந்தானமும் இணைந்து நடித்துள்ளனர்.
ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 49வது படத்தின் பூசை சென்னையில் நடைபெற்றது. ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
கல்லூரி பின்னணியில் உருவாக்கும் இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கல்லூரி மாணவனாக சிம்பு நடிக்கிறார். சினிமாவில் சிம்பு மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்யப்பட்டவர் சந்தானம்.
தற்போது நாயகனாக நடித்தாலும் சிம்புவுக்காக தனது கதாநாயகக் கொள்கையை விட்டுக்கொடுத்து, இப்படத்தில் மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
கடைசியாக சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சந்தானம் நடித்திருந்தார்.
இவர், நாயகனாக நடித்திருந்த ‘சக்க போடு போடு ராஜா’ என்ற படத்திற்கு சிம்பு இசை அமைத்திருந்தார்.
‘டிராகன்’ என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமான கயாது லோஹர், இதில் சிம்புவின் நாயகியாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் விடிவி கணேஷ் நடிக்கிறார்.