தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ இந்திப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிருத்தி சனோன் நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இப்படம் கடந்த 28ஆம் தேதி திரைகண்டது. இதற்கு விமர்சன ரீதியில் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், வசூல் நிலவரம் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, படத்தின் மொத்த வசூல் ரூ.118 கோடி என்று தெரிய வந்துள்ளது. வெளியான முதல் ஏழு நாள்களுக்குள் ரூ.100 கோடியைக் கடந்துவிட்ட நிலையில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தனுஷ் வட்டாரம் உற்சாகத்தில் உள்ள நிலையில், அவரது அடுத்த இந்திப் படத்திலும் கிருத்தி சனோன்தான் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

