அண்மையில் வெளியான ‘டெஸ்ட்’ படத்தில், குமுதா என்ற ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.
விக்ரம் வேதா, இறுதிச்சுற்று, மண்டேலா ஆகிய படங்களைத் தயாரித்த சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் இது.
மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான இப்படத்தின் குறுமுன்னோட்டக் காணொளிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், நயன்தாராவின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் காணொளியை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் நயன்தாரா பேசியுள்ளார்.
“இந்தப் படம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
“காதல், அசைக்க முடியாத நம்பிக்கையின் கதைதான் ‘டெஸ்ட்’. இதை ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ஓடிடி தளத்தில் மக்கள் பார்ப்பதைக் காண நான் ஆவலாகக் காத்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.
இந்தப் படத்தில் சித்தார்த் சிறப்பாக உள்ளதாகவும் உண்மையான கிரிக்கெட் வீரரை அவர் திரையில் பிரதிபலித்திருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் பாராட்டி உள்ளார்.