சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் வெளியீடு பிப்ரவரி 20லிருந்து பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதாக ஒப்பந்தம் போட்டு வாங்கிய வினியோகஸ்தர் முன்பணம் மட்டுமே கொடுத்துள்ளாராம். மீதித் தொகையைச் செலுத்தாததே இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
படத்தை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது தொடர்பாகத் தயாரிப்பாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், படத்தை ஒரு வாரம் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

