தந்தை, மகளின் பாசப் போராட்டத்தை விவரிக்கும் தாய்நிலம்

தந்தை, மகளின் பாசப் போராட்டத்தை விவரிக்கும் தாய்நிலம்

படம்: தினத்தந்தி

26 Sep 2026 - 5:17 pm

1 mins read

இலங்கை உள்நாட்டுப் போரின் பின்னணியில், தந்தைக்கும் மகளுக்குமான நெகிழ்ச்சியான பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இலங்கைப் போர்ச்சூழலில் இருந்து தப்பித்து, தனது மகளை உறவினர் வீட்டில் ஒப்படைப்பதற்காகத் தமிழகம் வருகிறார் ஒரு தந்தை. ஆனால், உறவினர்கள் குழந்தையைச் சேர்த்துக்கொள்ள மறுக்கவே, தந்தையும் மகளும் ஆதரவின்றித் தெருவில் தங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இத்தகைய கடினமான சூழ்நிலையிலும் மகளின் மகிழ்ச்சிக்காக ஒரு தந்தை எதிர்கொள்ளும் சவால்களையும் தியாகங்களையும்தான் இத்திரைப்படம் உணர்வுபூர்வமாகப் பேசுகிறது.

இயக்குநர் ஐ.வி.சசியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அபிலாஷ் ஜி.தேவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

டாக்டர் அமர் ராமச்சந்திரன், நேகா அமர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தீபக் பிரபாகர், பத்மஜா, நிமிஷா நம்பியார் உள்ளிட்ட பலர் முக்கியப் பங்களிப்பை அளித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்