நடிகர் ஜீவா நடிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வசூலில் அசத்திக் கொண்டிருக்கிறது.
பொங்கலுக்கு வெளியாக வேண்டிய ‘ஜனநாயகன்’ படம் தள்ளிப்போனதால் வேறு சில படங்கள் வெளியாயின.
அதில் ஜீவா நடித்த படமும் ஒன்று. ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வெளியான முதல் வாரம் 146 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது.
எனினும், படத்துக்கான ரசிகர்களின் விமர்சனம் நன்றாக இருந்ததால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆன நிலையில், 320க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.28 கோடி வசூல் கண்டுள்ளதாம். அதேபோல் கேரளாவில் ரூ.1.50 கோடி வசூல் கண்டுள்ளது. படத்தை விளம்பரப்படுத்த ஜீவா மிகவும் மெனக்கெட்டார். தமிழக கிராமப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளுக்குக்கூட நேரில் சென்று ரசிகர்களைச் சந்தித்தார். இதனால் திரையுலகத்தினர் அவரைப் பாராட்டுகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவை துபாயில் நடத்தத் திட்டமிட்டிருந்த தயாரிப்பாளர், நண்பர்கள் வலியுறுத்தியதை அடுத்து சென்னையிலேயே அந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

