விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல் கால்டகிரோன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான்’.
பா. இரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்தப் படம் தமிழ், தெலுங்கில் இம்மாதம் 15ஆம் தேதி வெளியானது.
வரும் 30ஆம் தேதி இந்தியில் வெளியாகவிருக்கிறது ‘தங்கலான்’. கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இப்படம், இப்போது உலகளவில் ரூ.100 கோடி வசூலை நெருங்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

