‘சாதனைப் பயணத்திற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி’

1 mins read
7ef1da89-c11b-4e11-8620-88a4c4a8f93e
ஜி.வி.பிரகா‌‌ஷ். - படம்: ஊடகம்

இசையமைக்க வாய்ப்பளித்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகா‌‌ஷ்.

இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் பயணம் செய்யும் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தமிழில் ‘இடிமுழக்கம்’, ‘13’, ‘கிங்ஸ்டன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளராக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘வணங்கான்’, ‘வீர தீர சூரன்’, ‘இட்லி கடை’ மற்றும் ‘எஸ்.கே.25’ என ஏகப்பட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். அதோடு அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

‘எஸ்.கே.25’ இவர் இசையமைக்கும் 100வது படம் ஆகும். இப்படத்தை ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் தற்போது 100வது படத்திற்கு இசையமைக்க உள்ள நிலையில், இந்த சாதனைப் பயணத்திற்கு வாய்ப்பளித்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்திநடிகர்