தனக்கு இயல்பாக நடிக்கத் தெரியாது என்று பலரும் கிண்டல் செய்ததாகக் கூறியுள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை தனது தாய்மொழியான மலையாளத்தில் இவர் மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இந்நிலையில், சுரேஷ்கோபி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா’ என்ற படத்தின் மூலம் மீண்டும் மலையாள சினிமாவில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் அனுபமா நடிப்பது தெரிந்ததும், அவரால் தன்னுடைய கதாபாத்திரத்தில் சரியாக நடிக்க இயலாது என சமூக ஊடகங்களில் பலர் கிண்டலுடன் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், கொச்சி நகரில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கோபப்படாமல் தன்னைக் கேலி செய்தவர்களுக்குப் பதிலடி கொடுத்தார் அனுபமா.
“என்னால் நடிக்க முடியாது என ஏராளமானோர் ‘டிரோல்’ செய்தனர். அதை மீறி இயக்குநர் பிரவீன் என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்தார்.
“கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’, ‘தில்லு ஸ்கொயர்’ போன்ற படங்கள் வெற்றி அடைந்து என்னை உற்சாகப்படுத்தின.
“என்னை ஆதரிப்பவர்களுக்கும் வெறுத்தவர்களுக்கும் நன்றிகூற கடமைப்பட்டு உள்ளேன்,” என்றார் அனுபமா.