தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகளின் விருப்பத்தை நிறைவேற்றிய ஊர்வசிக்கு நன்றி: மனோஜ் கே ஜெயன்

2 mins read
8c29ee3c-5156-46c4-bea0-dfbb5cb24e81
தாய், தந்தையுடன் தேஜா லட்சுமி. - படம்: ஊடகம்

ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் என்று கூறி கண் கலங்கினார் ஊர்வசியின் முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயன்.

கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஊர்வசி, கடந்த 2000ஆம் ஆண்டில் நடிகர் மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2008ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இவர்களுக்கு தேஜா லட்சுமி என்கிற மகள் இருக்கிறார். மனோஜ் கே ஜெயன், ஆஷா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தேஜா லட்சுமி தற்போது தனது தந்தையுடன் இருக்கிறார்.

இந்நிலையில் மலையாளத்தில் ‘சுந்தரியாய ஸ்டெல்லா’ என்ற படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் தேஜா லட்சுமி. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய மனோஜ் கே ஜெயன், “தேஜா லட்சுமி தனக்கு நடிக்க விருப்பம் இருக்கிறது என்று முதன்முதலில் என் மனைவி ஆஷாவிடம்தான் கூறினார்.

“ஆஷா அவரது அம்மா மட்டும் அல்ல, நல்ல தோழியும் கூட. இருந்தாலும் தேஜா லட்சுமியை அவரது அம்மா ஊர்வசியிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்து அனுமதி கேட்கச் சொல்லி சென்னைக்கு அனுப்பி வைத்தேன்.

“அவர் சம்மதித்ததால்தான் தேஜா லட்சுமி சினிமாவில் நுழைந்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ளார். ஒருவேளை மகள் நடிப்பதற்கு ஊர்வசி தடை போட்டிருந்தால் அதில் என்னால் குறுக்கிட்டிருக்க முடியாது.

“அந்த வகையில் மகளின் விருப்பம் அறிந்து செயல்பட்டு இருக்கிறார் ஊர்வசி,” என்று பேசும்போதே கண்கலங்கினார் மனோஜ் கே ஜெயன். அருகில் அமர்ந்திருந்த அவரது மகள் தேஜா லட்சுமி தந்தையை சாந்தப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்