பெற்றோரின் பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது: அக்ஷரா

பெற்றோரின் பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது: அக்ஷரா

2 mins read
29664a6e-2a1e-48cf-9302-dc87b03ac700
சகோதரி ஷ்ருதியுடன் அக்‌ஷரா ஹாசன். - கோப்புப் படம்: முகநூல்/ஷ்ருதி ஹாசன்
Google News Preferred Icon

தனது பெற்றோரின் பாரம்பரியக் கலைகளைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு தனக்கும் தன் சகோதரி ஷ்ருதி ஹாசனுக்கும் உள்ளது என நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.

அவர் நடித்துள்ள ‘சுமுலேகரா’ என்ற திரைப்படம் அண்மையில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனது பெற்றோர் வீட்டுக்குள்ளும் வெளியிலும் உள்ள இரண்டு வெவ்வெறு உலகங்களைப் பற்றி தங்களுக்குத் தெரியவைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டுக்குள் இருக்கும்போது தானும் தனது அக்கா ஷ்ருதியும் சிறந்த மனிதர்களாகவும் சுயமாகவும் இருப்பதற்கான முழுச் சுதந்திரத்தையும் பெற்றோர் அளித்ததாகக் கூறியுள்ளார் அக்ஷரா.

அதேசமயம் வீட்டிற்கு வெளியே முற்றிலும் வேறுபட்ட உலகம் இருப்பதையும் தாம் உணர்ந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதுவரைத் தானும் தன் சகோதரியும் ஏதேனும் சாதிக்க முடிந்தது என்றால் அதற்குத் தாங்கள் விருப்பப்பட்ட பாதையில் பயணம் மேற்கொள்ள பெற்றோரின் அனுமதி கிடைத்ததும் அவர்களின் சரியான வழிகாட்டுதலும்தான் காரணம் என்று தமது பேட்டியில் அக்ஷரா குறிப்பிட்டுள்ளார்.

யாராக இருந்தாலும் எங்கிருந்து வந்தோம் என்பதை மறந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், பெற்றோரின் பாரம்பரியத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு இருப்பதைத் தாம் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“அதே நேரத்தில், எங்களுக்கென்று தனித்துவமான இடத்தை உருவாக்கிக்கொள்ளவும் சுயமாகச் சாதிக்கவும் எங்களுக்கான சுதந்திரத்தை அளித்திருக்கிறார்கள்.

“நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, எங்களால் முடிந்த சிறந்த உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்பதைப் பெற்றோர் புரியவைத்தார்கள். அதனால்தான் சில விஷயங்களில் நாங்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டியிருக்கிறது.

“ஏனென்றால், எங்கள் பெற்றோர் தங்களின் சொந்த உழைப்பாலும் திறமையாலும் கஷ்டப்பட்டு உருவாக்கிய பெருமையையும் பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது,” என்கிறார் அக்ஷரா ஹாசன்.

குறிப்புச் சொற்கள்