பள்ளியில் படிக்கும்போது தமக்கு அறவே மேடைப் பயம் இருந்ததில்லை என்று கூறுகிறார் நடிகை சாய் பல்லவி.
அப்போது இருந்த துணிச்சல்தான் தாம் நடிகை ஆக, முக்கியமான காரணம் எனக் கருதுவதாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பள்ளி பருவத்தில் சில சமயங்களில் வகுப்புக்குச் செல்லாமல் பள்ளியில் உள்ள அரங்கத்தில் நடனப் பயிற்சியில் ஈடுபடுவேன்.
“நான் வகுப்பில் இல்லை என்பது ஆசிரியர்களுக்கும் தெரிந்திருக்கும்.
“ஆனால் எனது முயற்சி குறித்து தெரியும் என்பதால் என்னைக் கண்டித்ததில்லை,” என்றும் அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளார்.