யாரைக் காதலிக்கிறீர்கள் எனக் கேட்டு வெறுப்பேற்றுகிறார்கள்: ஐஸ்வர்யா லட்சுமி

யாரைக் காதலிக்கிறீர்கள் எனக் கேட்டு வெறுப்பேற்றுகிறார்கள்: ஐஸ்வர்யா லட்சுமி

1 mins read
2cdcbda8-2783-4efa-9994-102f578b05d1
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. - படம்: ஊடகம்

மலையாள நடிகையும் மருத்துவருமான ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். அவரது நடிப்பில் ‘ஆக்‌ஷன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘புத்தம் புது காலை விடியாதா’, ‘கார்கி’, ‘கேப்டன்’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரு பாகங்கள் வெளியானது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக்லைஃப்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, நாள்தோறும் தனது சமூக ஊடகத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள், காணொளிகளைப் பதிவேற்றி வருகிறார்.

ஓய்வுநேரத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடி, அவர்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வழக்கமுள்ள ஐஸ்வர்யா லட்சுமி, என்னைப் பார்க்கும் எல்லோரும் ‘நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா?’ என்ற கேள்வியையே தொடர்ந்து கேட்டு வெறுப்பேற்றி வருகின்றனர் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

“நான் இப்போதும் தனி ஒருத்தியாக மகிழ்ச்சியாக இருந்து வருகிறேன். என்னுடன் தயவுசெய்து யாரையும் ஜோடி சேர்க்க முயற்சி செய்யவேண்டாம்,” என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு அவரையும் இளம் நடிகர் அர்ஜூன் தாஸையும் இணைத்து வதந்திகள் பரவின. உடனே அவர்கள், ‘நாங்கள் இரண்டுபேரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே’ என்று பதில் சொன்னார்கள். அந்த வதந்தி இன்னும் கூட அடங்கவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்