மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ள ரஜிஷா விஜயன் தமிழில் ஏற்கெனவே ‘கர்ணன்’, ‘சர்தார்-1’, ‘ஜெய்பீம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், மூன்றாவது முறையாக அவரும் நடிகர் கார்த்தியும் இணைந்து நடிக்க உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
இதில் அவரது ஜோடியாக ரஜிஷா ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கெனவே ‘சர்தார் 1’ படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில், அதன் இரண்டாம் பாகத்திலும் தற்போது நடித்து வருகின்றனர்.
“தொடர்ந்து ஒரே நாயகனுடன் இணைந்து நடிக்க என்ன காரணம் என்று கேட்கிறார்கள். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன் அதுதான் காரணம்,” என்கிறார் ரஜிஷா.