நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய நடிகை அனுசுயாவைப் பார்த்து சிலர் ‘ஆன்டி’ என்று கூப்பிட்டதால் கோபமானார் அனுசுயா.
‘புஷ்பா’ மற்றும் ‘புஷ்பா 2’ படத்தில் சுனில் மனைவியாக வில்லி வேடத்தில் நடித்திருந்தார் அனுசுயா.
தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கும் இவர், தமிழில் சமுத்திரக்கனி நடித்த ‘விமானம்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இவர் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார்.
அங்கு மேடையில் ஏறி, ‘ஜெயிலர்’ படத்தில் வரும் காவாலா பாடலுக்கு கவர்ச்சியாக ஆடை அணிந்து நடனம் ஆடினார். அப்போது இளம் ரசிகர்கள் பலரும் விசில் அடித்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ரசிகர்கள் சிலர், ‘ஆன்டி… ஆன்டி…’ என அனுசுயாவைப் பார்த்து சத்தம் போட்டனர்.
இதனால் கோபம் அடைந்த அனுசுயா, அங்கிருந்த மைக்கில், ‘‘நீங்கள் என்னைச் சீண்டினால், என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் மேடைக்கு வாருங்கள்,’’ என்றார்.
‘ஆன்டி’ என அழைத்ததால் கோபம் அடைந்து அவர் இப்படிப் பேசியதால், நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதனால் மனம் வருந்திய அனுசுயா, சிறிது நேரம் நடனம் ஆடாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தார். பிறகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால், மீண்டும் நடனமாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 39 வயதாகும் அனுசுயாவுக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன.

