சரவெடி ஆயிரம் பத்தணுமா: தீபாவளிக்கு ‘கருப்பு’ முதல் பாடல்!

1 mins read
1ec138f0-d71e-4154-b88f-cc617caaf87d
சூர்யாவின் ‘கருப்பு’. - கோப்புப் படம்: ஊடகம்

சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அண்மைய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் அதிரடிக் கதையாக நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கருப்பு’. இந்தப் படத்தில் சூர்யா வழக்குரைஞராக நடித்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

சூர்யாவுடன் திரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், கிராஃபிக்ஸ் பணிகளால் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது.

இருப்பினும், சூர்யா ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ‘கருப்பு’ திரைப்படத்தின் பாடலின் அண்மைய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ‘சரவெடி ஆயிரம் பத்தணுமா...’ எனப் பதிவிட்டிருந்தது. அதனை உறுதிப்படுத்தியுள்ள தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தீபாவளியன்று ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்