எதிர்வரும் 2026ஆம் ஆண்டு தனுஷ் மூன்று படங்களில் கவனம் செலுத்த உள்ளார்.
தற்போது அவர் ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு முதற்பாதியில் இப்படம் திரைகாண்கிறது.
இதையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். பின்னர் ஏப்ரல் மாதம் தமிழரசன் பச்சமுத்து தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஆகக் கடைசியாக அடுத்த ஜூலையில் வினோத்தும் தனுஷும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதுதான் அடுத்த ஆண்டுக்கான உத்தேசப் பட்டியல் என்று தனுஷ் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டில் தனுஷ் நடித்த ‘குபேரா’, ‘இட்லி கடை’, ‘தேரே இஷ்க் மே’ ஆகிய மூன்று படங்கள் வெளியீடு கண்டுள்ளன.

