சூர்யா நடிப்பில் மூன்று படங்கள் வெளியாக வாய்ப்பு

1 mins read
66e99946-d759-416f-9c4f-1a9d5c98d31d
சூர்யா. - படம்: ஊடகம்

இந்த ஆண்டில் கண்டிப்பாக தனது நடிப்பில் இரண்டு படங்களாவது வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் சூர்யா.

அண்மையில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது இதுகுறித்து மனம்விட்டுப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மலையாள இயக்குநர் அமல் நீரத் சொன்ன கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். நாற்பது நாள்களுக்குள் இப்படத்தை முடித்துவிடலாம் என அவர் உறுதி அளித்துள்ளாராம்.

எனவே, 2025ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் மூன்று புதுப் படங்கள் வெளியாகும் வாய்ப்புண்டு என்று உற்சாகப்படுகிறார்கள் அவரது ரசிகர்கள்.

குறிப்புச் சொற்கள்