ருக்மிணி நடிப்பில் மூன்று ‘பான் இந்தியா’ படங்கள்

1 mins read
5ca6119e-d991-45ba-a79f-30029b43b1a9
ருக்மிணி வசந்த். - படம்: என்டிவி இங்கிலீஷ்

‘மதராஸி’ படம் பெரிதாகப் பேசப்பட்டதோ இல்லையோ, படத்தின் நாயகி ருக்மிணி வசந்த் குறித்து ஊடகங்கள் தொடர்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

இவர் ‘காந்தாரா சப்டர்-1’ படத்தில் வில்லியாகவும் நடித்து அசத்தியிருந்தார்.

இந்திய அளவில் கவனிக்கப்படும் நாயகியாக மாறியுள்ள ருக்மிணி, தற்போது ‘டாக்சிக்’ படத்திலும் ஜூனியர் என்டிஆருடன் ஒரு படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இதையடுத்து, தெலுங்கில் ராம்சரண் நடிக்கவுள்ள அவரது 17வது படத்திலும் இவர்தான் கதாநாயகியாம்.

அவர் தற்போது நடிக்கும் மூன்று படங்களுமே ‘பான் இந்தியா’ படங்களாக உருவாகி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்