இயக்குநர் வெற்றிமாறனும் சிம்புவும் இணைவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி அல்ல, உண்மை என்பதை இயக்குநரே உறுதி செய்துவிட்டார்.
முதன்முறையாக வெற்றிமாறனுடன் இணைகிறார் சிலம்பரசன். வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் குண்டல் கும்பல் பற்றிய கதையைத்தான் சிம்புவுக்காக தயார் செய்துள்ளாராம் வெற்றிமாறன். படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, அண்மையில் இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்குச் சென்ற சிம்பு, அங்கிருந்த அவரது உதவி இயக்குநர்களும் மற்ற ஊழியர்களும் உற்சாகமாக இருப்பதைக் கண்டு வியந்து போயிருக்கிறார்.
காரணம், ‘தக் லைஃப்’ படத்தின் படுமோசமான தோல்வி குறித்து அங்கிருந்த யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லையாம்.
இதுகுறித்து விசாரித்தபோது, “யாரும் தோல்வி, மோசம் என்ற விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். நம்மைப் பொறுத்தவரை ஒரு நல்ல படத்தைத்தான் எடுத்தோம். எனவே அது நமக்கு வெற்றிப் படம்தான்,” என்று மணிரத்னம் கூறிவிட்டார்.
அதனால் வெற்றிக் கொண்டாட்டம் முடிந்தது போன்ற உற்சாகத்துடன் அவரது குழுவினர் வலம் வருகின்றனர்.