தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகர் விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் தலைப்பு கசிந்தது

1 mins read
67131832-03ab-41bb-b9dc-f65dfaa40004
நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே. - படம்: ஊடகம்

நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகப்போகும் திரைப்படம் ‘தளபதி 69’. விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் தனது இறுதிப் படமாக ‘தளபதி 69’ படமாக ‘69’ படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. பொங்கல் சிறப்பாக விஜய்யின் 69வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் எதுவும் வரவில்லை.

இந்நிலையில் வரும் ஜனவரி 26, குடியரசு தினத்தன்று ‘தளபதி 69’ படத்தின் செய்தி வெளியாகும் என கூறப்படுகிறது. படத்திற்கு படக்குழுவினர் ‘நாளைய தீர்ப்பு’ என பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

விஜய் அரசியலில் ஈடுபட இருப்பதால் இந்த பெயர் வைத்தால் அட்டகாசமாக இருக்கும் என ரசிகர்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்