‘சூர்யா-46’ படத்தின் தலைப்பு கசிந்தது

‘சூர்யா-46’ படத்தின் தலைப்பு கசிந்தது

படம்: ஜூம் டிவி

04 Feb 2026 - 6:14 pm

1 mins read

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் ’சூர்யா-46’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தொழில்நுட்பப் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. ‘கருப்பு’ வெளியானதும் அடுத்த படத்தின் தலைப்பை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளாராம் வெங்கி அட்லூரி. இந்தப் படத்தில் இந்தி நடிகை ரவீனா டாண்டன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் அசத்தலான ஒரு கௌரவ வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளதாகத் தகவல். ஏற்கெனவே சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த ‘புறநானூறு’ படத்தில் துல்கரும் நடிப்பதாக இருந்தது.

இந்நிலையில், ‘சூர்யா-46’ படத்தின் தலைப்பு கசிந்துள்ளது. ’விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்பதுதான் தலைப்பாம்.

இப்படத்தின் நாயகன் பாத்திரம், ஏற்கெனவே சூர்யா நடித்திருந்த ‘கஜினி’ படத்தில் அவர் ஏற்றிருந்த தொழிலதிபர் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தைப் போன்று உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் மமிதா பைஜு.

குறிப்புச் சொற்கள்
சூர்யாநடிகைதிரைப்படம்இயக்குநர்