திரிஷா நடித்த தெலுங்குப் படம் ஒன்று உலகச் சாதனை படைத்துள்ளது. தொலைக்காட்சியில் அதிக முறை ஒளிபரப்பான படம் என்பதுதான் அந்தச் சாதனை.
திரிஷா தெலுங்கில் நடித்த ‘அத்தடு’ என்ற அந்தப் படம் இதுவரை தொலைக்காட்சியில் 1,500 முறை ஒளிபரப்பாகி உள்ளதாம். உலகளவில் வேறு எந்தப் படமும் இத்தனை முறை ஒளிபரப்பப்பட்டது இல்லையாம்.
திரிவிக்ரம் இயக்கிய இப்படத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார் திரிஷா.
மேலும், பிரகாஷ்ராஜ், சோனு சூட், நாசர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.
‘அத்தடு’ படம் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்நிலையில், தொலைக்காட்சிகளில் அதிகமுறை ஒளிபரப்பான படம் என்ற உலகச் சாதனையை நிகழ்த்தி இருப்பதை திரிஷா ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பலவிதமாகப் பதிவிட்டுக் கொண்டாடி வருகிறார்கள்.

